மாணவனின் கண் பார்வை பாதிப்பு பள்ளிகல்வித் துறைக்கு, 'நோட்டீஸ்' - Asiriyar.Net

Post Top Ad


Thursday, March 5, 2020

மாணவனின் கண் பார்வை பாதிப்பு பள்ளிகல்வித் துறைக்கு, 'நோட்டீஸ்'


கண்பார்வை பறிபோனது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை பதிலளிக்க, மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த வேலுவின் மகன், கார்த்திக், 14. மேடவாக்கம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.பிப்ரவரியில், வகுப்பறையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, பள்ளி ஆசிரியை இரும்பு, 'ஸ்கேலால்' மாணவனின் பின்பக்க தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் இடது கண் பார்வை பாதித்தது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், பள்ளி கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அதில், 'மாநிலம் முழுவதும், மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறு செய்த ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, மாணவனுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என, இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுஉள்ளது.

Recommend For You

Post Top Ad