மார்ச் 22-ந் தேதி.. ஒரே ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு ஏன்? பிரதமர் மோடியின் திட்டம் என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 20, 2020

மார்ச் 22-ந் தேதி.. ஒரே ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு ஏன்? பிரதமர் மோடியின் திட்டம் என்ன?






கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஒரே ஒரு நாளை தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.


கொரோனா வைரஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் 80,928 பேர் வரை பாதித்து இருக்கிறது. அங்கு இதுவரை 3,245 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் 178 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். 4 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோன வைரஸ் இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மக்கள் முன் உரையாற்றினார்.

என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது பேச்சில், உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.


உலகம்
மோசம்

உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது. கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும்; நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


வீடு
வீட்டில் இருங்கள்

65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். நம்மை நாமே தற்காத்துக்கொள்வதே பிரதான கடமையாக உள்ளது; கூட்டங்களை தவிர்த்து, அனைவரும் வீடுகளில் இருக்கவேண்டும். கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.


மக்கள்
மக்கள் எல்லோரும் எப்படி

அன்று மாலை மக்கள் எல்லோரும் 5 மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்ட வேண்டும். நாடு முழுக்க சைரன் ஓலிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் கைதட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.


ஐடியா
ஐடியா ஏன்?

பிரதமர் மோடியின் இந்த ஐடியாவை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இது வைரஸை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் இப்படி மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் மக்கள் பொதுவாக வெளியே செல்லாத ஞாயிற்றுக்கிழமையை மோடி தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.


ஒரு நாள்
ஒரு நாள் ஏன்?

பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதியை தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. ஒரு நாள் முழுக்க மக்கள் உள்ளே இருந்தால் வைரஸ் மொத்தமாக கட்டுப்படியாகாது. சீன அரசு வுஹன் நகரத்தை இரண்டரை மாதங்கள் மூடிய பின்தான் அங்கு வைரஸ் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிக மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் எப்படி ஒரே ஒருநாள் வைரஸை கட்டுப்படுத்தும் என்று கேள்வி எழுந்துள்ளது.


காரணம்
என்ன காரணம்

இதற்கு பொருளாதார ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் பங்குச்சந்தை தினமும் மோசமான சரிவை சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் தினமும் 1500 புள்ளிகள் வரை மோசமான வருகிறது. இதனால் இந்தியாவில் முழுக்க முழுக்க லாக் டவுன் அறிவிக்க முடியாது. இதனால் பணிகள் பாதிக்கும். உற்பத்தி பாதிக்கும். இந்தியாவில் பொருளாதாரம் மோசமாக சரியும்.

ஒரே
ஒரே நாள்

மொத்தமாக நாட்டில் அவசர நிலை கொண்டு வந்தால், இந்தியாவின் பொருளாதாரம் நினைத்து பார்க்க முடியாத சரிவை சந்திக்கும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இதை சமாளிக்கலாம். ஆனால் இந்தியா முழு லாக் டவுனை சமாளிக்க முடியாது. இது கொரோனவோடு சேர்த்து வேறு சில இழப்புகளை ஏற்படுத்தும். அதனால் ஒரே ஒரு நாள் மட்டும், அதிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Post Top Ad