தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேசன்' ஏப்ரல் 1 முதல் அமல் : பலன்கள் என்னென்ன ? - Asiriyar.Net

Post Top Ad


Thursday, March 19, 2020

தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேசன்' ஏப்ரல் 1 முதல் அமல் : பலன்கள் என்னென்ன ?

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் உள்மாநில பெயர்வு திறன் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது என்றார்.


அம்மாவட்ட மக்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றதையடுத்து, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவித்தார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.


மின்னணு குடும்ப அட்டைகள் இல்லாத குடும்ப அட்டைத்தாரர்கள், தங்களின் ஆதார் அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் கொண்டு ஒருமுறை கடவு சொல் (OTP) உதவியுடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார். ஒரு நியாய விலைக்கடையில் அரிசி பெற்ற குடும்ப அட்டைத்தாரர்கள், அடுத்த நியாய விலைக்கடையில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Recommend For You

Post Top Ad