12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு !! - தமிழக அரசு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, March 25, 2020

12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு !! - தமிழக அரசு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.


அதேபோல, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு காரணமாக தேர்வு எழுத முடியாத 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு தேதியில் தேர்வு நடத்தப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommend For You

Post Top Ad