தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 24, 2020

தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்...




தேர்வு எழுதுவதில் நேர நிர்வாகம்


மூன்று மணிநேரத்தில் நீங்கள் அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் பெறலாம் . அதாவது 180 நிமிடங்களில் 100 மதிப்பெண்கள் . அப்படியென்றால் ஒரு மதிப்பெண்ணுக்கு 1 . 8 நிமிடங்கள் . இதை ஒன்றரை நிமிடம் என்று வைத்துக்கொள்வோம் . அதாவது ஒரு மதிப்பெண்ணுக்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் . இப்படிச் செய்தால் இரண்டரை மணிநேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிடலாம் . மீதமுள்ள நேரத்தில் விடைகளைச் சரிபார்த்துக்கொள்ளப் பயன்படுத்தலாம் .

தேர்வின் முந்தைய நாள் செய்யவேண்டியவை

1 . புதிதாக எதையும் படிக்காதீர்கள் .

2 . குறிப்புகளை வைத்துப் படியுங்கள் .

3 . படித்த அனைத்தையும் தூங்கும் முன் நினைவுகூருங்கள் .

4 . இரவு கண்டிப்பாக ஐந்து மணிநேரமாவது தூங்குங்கள் .

5 . மறு நாள் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைப் பட்டியலிட்டு , அனைத்தையும் மறக்காமல் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் .

தேர்வு அன்று . . . 1 . அதிகாலை எழுந்ததும் இரவில் நினைவுகூர்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பாருங்கள் .

2 . குளித்து , உடுத்து , உண்டு , வணங்கித் தன்னம்பிக்கையோடு தேர்வுக்குச் செல்லுங்கள் .

3 . அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடவும் . நண்பர்களிடம் அதிகம் பேச வேண்டாம் . பதற்றம் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்கவும் .


4 . தேர்வு முடிந்த பின் , வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு , அன்றைய தேர்வில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி காலத்தை விரயமாக்காமல் , அடுத்த தேர்வுக்கு மனஉறுதியுடன் படிக்கத் தொடங்குங்கள்.

வெற்றி என்றென்றும் உங்களுடையதே

Post Top Ad