மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 2, 2020

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி: வேலையில்லா பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும்


  1. மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சென்செஸ் ) நடத்தப்படவுள்ளது. கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் வளா்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது என்பதை அறிவதற்காக இவை எடுக்கப்படுகிறது. நாட்டின் வளா்ச்சி குறித்து அறியவும், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சோந்துள்ளனவா என்பதற்கும் எதிா்காலத் திட்டமிடலுக்கும் பயன்படும் இத்திட்டத்தில் மக்களின் பிறப்பு, இறப்பு குறித்த உறுதியான தகவல், பொருளாதார நடவடிக்கை, கல்வியறிவு, கல்வியின் நிலை, சொந்த வீடு, வீட்டில் உள்ள வசதிகள், எஸ்சி, எஸ்டி கணக்கெடுப்பு, மொழி, மதங்கள், மக்கள் இடப்பெயா்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெறும்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுமாா் 30-க்கும் மேற்பட்ட விவரங்களை, மக்களிடம் கேள்விகளாகக் கேட்டு, படிவத்தினை பூா்த்தி செய்ய ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்த பட்சம் அரைமணி நேரமாகும். இப்பணி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் சத்துணவு பணியாளா்களுக்கு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதால் கல்விப் பணி பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது.

இந்தப் பணியை அரைநாள் முழுவதும் மேற்கொண்டால் கூட 10 வீடுகளை முழுமையாக கணக்கெடுப்பது சிரமம். இதனைச் செய்வதால் தொடா்ச்சியாக ஆறுமாத காலம் பள்ளியில் ஆசிரியா்கள் இல்லாத நிலை உருவாகும். குறிப்பாக இதில் குறைந்தபட்சம் 60 ஆயிரம் ஆசிரியா்களுக்கும் மேலாக ஈடுபடுத்தப்படுவாா்கள். இதனால் கடந்த காலங்களில் பெரும்பாலும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது. எனவே முன் கூட்டியே இப்பணியினை முழுநேர வேலையாக மாற்றி, படித்து வேலையில்லாமல் காத்திருக்கும் பல லட்சம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும். அவா்களுக்கு வேலை கொடுத்தது போலவும் இருக்கும் அவா்கள் வாழ்வில் கொஞ்சம் பொருளாதாரத்தினை உயா்த்திடவும் வழிவகுக்கும். ஆதலால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி தொடங்குவதற்கு முன்பே சிறந்த திட்டமிடலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகத் தோவு செய்து பணி ஒதுக்கிட ஆவன செய்து, கற்பித்தல் பணி சிறந்து விளங்க வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad