இத்தனை முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதயநோய்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..அப்ப எத்தனை முட்டை சாப்பிடலாம்.? - Asiriyar.Net

Post Top Ad


Sunday, January 5, 2020

இத்தனை முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதயநோய்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..அப்ப எத்தனை முட்டை சாப்பிடலாம்.?


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு.
வாரத்திற்கு 4 முதல் 5 முட்டைகளை உட்கொண்டாலே உடலுக்கு ஆரோக்கியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
உடலுக்கு அதிக நன்மைகளை தரக் கூடிய கோழி முட்டையை சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், இதிலும் உடல்பயிற்சி மேற்கொள்ளுபவர் அதிக ப்ரோட்டின் தேவை இருப்பதால் தினமும் அதிக முட்டைகள் சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது முற்றிலும் தவறானதாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மிக நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் வேண்டுமானால் 3 முட்டைகளை எடுத்து கொள்ளலாம்.

ஆனால் பொதுவாக ஒரு நாளைக்கு 2 முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது தீயவை என குறிப்பிட்டுள்ளனர். பின்னர் 56 கிராம் எடையுள்ள கோழி முட்டை ஒன்றில் அதிகபட்சம் 80 கலோரிகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. ஒரு முட்டையில் 200 முதல் 250 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அன்றாடம் 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உடலில் சேரும்போது, இதய நோய்க்கான வாய்ப்பு 17% ஆக உள்ளது. இதை தவிர இறப்பிற்கான அபாயமும் 18% உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிம் உள்ளது.

மேலும் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது தெரிவிக்கின்றனர். அதேபோல ஒரு நாளைக்கு 2 முட்டைகள் சப்பிட்டே ஆக வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. வாரத்திற்கு 4 முதல் 5 முட்டைகளை உட்கொண்டாலே உடலுக்கு ஆரோக்கியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Recommend For You

Post Top Ad