வட்டாரக்கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பிக்க!!நாளை கடைசிநாள்! - Asiriyar.Net

Post Top Ad


Monday, January 20, 2020

வட்டாரக்கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பிக்க!!நாளை கடைசிநாள்!
மொத்தம் 97 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது – 29, BC - 29, MBC – 20, SC/ST – 19 என மொத்தம் 97 இடங்கள் உள்ளது.

உட்பிரிவு வாரியான காலியிடங்கள் விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

TN TRB Educational Officer Recruitment 2019 பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC, MBC, SC/ST பிரிவினர் அதிகபட்சமாக 57 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவில் டிகிரி படித்தவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில், ஆசிரியர் படிப்பு (B.Ed) படிப்பும் படித்திருக்க வேண்டும். இவை அல்லாத வேறு Equivalent Qualifications (இணை கல்வித்தகுதி) உள்ளவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க 21/01/2020 கடைசி நாள் என்பதால் இன்றே விண்ணப்பிப்பது கடைசிநேர தொழில்நுட்ப தவறுகளை தவிர்க்க உதவும்.

Recommend For You

Post Top Ad