அன்புள்ள திருடனுக்கு... ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்! - Asiriyar.Net

Post Top Ad


Friday, January 31, 2020

அன்புள்ள திருடனுக்கு... ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்!

அன்புள்ள திருடா... நீ திருடிச் சென்ற, 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பி கொடுத்துவிடு' என, பள்ளி ஆசிரியர்கள், திருடனுக்கு எழுதிய உருக்கமான கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் 640 மாணவர்களுடன் செயல்படும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 44 பேர் பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில் ஜன.,29 அன்று, தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த மூன்று லேப்டாப், ஒரு 'பென் டிரைவ்' மற்றும் சி.சி.டி.வி., காட்சிகள் பதிவாகும், 'ஹார்டு டிஸ்க்' ஆகியவற்றைத் திருடிச் சென்றான். இதுகுறித்து தலைமை ஆசிரியர் தலச்சேரி போலீசில் புகாரளித்தார்.

மேலும், 7 மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு திருட்டு சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. திருடப்பட்ட 'பென் டிரைவ்'வில் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு இருப்பதால் தவிப்புக்குள்ளான ஆசிரியர்கள், புதிய யுக்தியை கையாண்டனர். அதன்படி, திருடனுக்கு தங்களது நிலையை விளக்கிக் கடிதம் எழுதி, 'வாட்ஸ்ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட முடிவு செய்தனர். அந்த கடிதம் திருடனுக்கு கிடைத்தால், தங்கள் மீது கருணை காட்டி, பென்டிரைவ் திருப்பித் தருவான் என்ற நம்பிக்கையில், மிகவும் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதம் சமூக வலைதளங்களில் இரு நாட்களாக வைரலாகி வருகிறது. உருக்கமான வேண்டுகோள்! கடிதத்தில், 'அன்புள்ள திருடனுக்கு... நீ யார் என்று எங்களுக்கு தெரியாது.

ஆசிரியர்களின் 'டிஜிட்டல் கையெழுத்து' அடங்கிய பென் டிரைவை நீ எடுத்து போய்விட்டாய். அதில் உள்ள வருகைப் பதிவின் படிதான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அந்த கருவி இல்லாததால் எங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்காது. வீட்டு செலவு, பெரியவர்களுக்கு மருத்துவ செலவு, கடனுக்கு வட்டி கட்டுதல் போன்றவைகள் உள்ளன. எனவே அந்த 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பி கொடுத்து விடு, என கடிதத்தில் உருக்கமாக திருடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Recommend For You

Post Top Ad