பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி..! இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த ஜெய் சந்தியா ராணி..! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, January 4, 2020

பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி..! இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த ஜெய் சந்தியா ராணி..!


பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி..! இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த ஜெய் சந்தியா ராணி..!

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் என 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களிலும் ஊராட்சி பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் மாறி மாறி முன்னிலையில் இருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பலர் பெரும் தலைவர்கள் பேசி வருவதை பார்க்க முடிகிறது.அதே வேளையில் அரசியலில் அதிக ஈடுபாட்டை இளைஞர்கள் வெளிப்படுத்தும் விதங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. எந்த ஒரு தருணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஎன் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி 210 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவருடைய வெற்றி இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசியலில் இன்றைய இளைஞர்கள் கால் பதிய தொடங்கி விட்டனர் என்ற ஒரு மனோபாவத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது. வெற்றி பெற்ற கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணிக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Recommend For You

Post Top Ad