10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-"மாணவர்களுக்கு அனுமதி இல்லை" திடீர் எச்சரிக்கை .!! - Asiriyar.Net

Post Top Ad


Friday, January 24, 2020

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-"மாணவர்களுக்கு அனுமதி இல்லை" திடீர் எச்சரிக்கை .!!


அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதஉள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (துவக்க அனுமதி பெற்று முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உட்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இதில் தவறு நடந்தால் தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த ஒரு திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு மையப் பட்டியலில் அவற்றின் இணைப்புப் பள்ளிகளின் விபரங்களும் விடுதலின்றி இடம்பெற்றுள்ளன. தேர்வு மையப் பட்டியலில் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மைய பட்டியலில் அங்கீகாரம், துவக்க அனுமதி பெறப்படாத, எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad