பணம் Vs பகட்டான வாழ்க்கை... நிதி சார்ந்து சரியான முடிவெடுப்பது எப்படி? - Asiriyar.Net

Post Top Ad


Thursday, December 19, 2019

பணம் Vs பகட்டான வாழ்க்கை... நிதி சார்ந்து சரியான முடிவெடுப்பது எப்படி?

அலுவலகம் ஒன்றில் வேலை செய்பவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களில் சிலர் தாங்கள் மற்றவர்களைவிட வசதியானவர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்புவார்கள். விலையுயர்ந்த ஆடைகள், போன், கார் ஆகியவற்றின் மூலம் தங்கள் பணபலத்தை எடுத்துக்காட்டப் பார்ப்பார்கள். இப்படி அலுவலக ஊழியர்கள் தங்கள் சக்திக்கு மீறி நடந்துகொண்டால் அது பகட்டு.

ஆனால் அதுவே ஒரு தொழிலதிபராக இருந்தால், அவர் தன் தொழில் நிமித்தம் சமுதாயத்துடன் ஒன்றிணைந்துதான் செயல்பட வேண்டும். மேலும், அவர் தன் பணபலத்தைக் காண்பிப்பதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டு வர முடியும்; தன்னைப் போன்ற மற்ற தொழிலதிபர்களுடன் நல்ல உறவையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

மாற்றங்களுக்கேற்ப வேகமாக தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த உலகில், இன்று அனைவரின் மத்தியிலும் பிரசித்திபெற்ற ஒரு பொருள் நாளை மதிப்பிழந்துவிடும். உதாரணமாக நீங்கள் தற்போது பிரபலமாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனால் இன்று நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமாகப் பேசப்படலாம். ஆனால், நாளை ஆப்பிள் போனின் அடுத்த மாடல் விற்பனைக்கு வரும்போது, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர் அதை வாங்கினால் அவர் பிரபலமாகிவிடுவார்.

மற்றவர்களைப் பார்த்து, நாம் நிதி முடிவுகளை எடுப்பதைவிட, நாமே நன்கு யோசித்து முடிவெடுப்பது பிற்காலத்தில் பெரிய நஷ்டத்தைத் தவிர்க்க உதவும்.

பிறகு... நண்பர்கள் வட்டாரத்தில் மீண்டும் முன்னிலை பெற நீங்கள் உங்கள் நண்பரிடம் இருப்பதைவிட விலையுயர்ந்த வேறொரு போனை வாங்குவீர்கள். இந்தப் போட்டியில் நீங்கள் இரண்டு விஷயங்களை மறந்து விடுவீர்கள். ஒன்று, நீங்கள் வாங்கும் இந்த போன் இன்று மதிப்புடையதாக இருந்தாலும் நாளை அதன் மதிப்பு குறைந்துவிடும். இதனால் இழப்பு உங்களுக்குத்தான். இரண்டாவது, இந்தப் போட்டியில் உங்கள் நிதிக் குறிக்கோளை மறந்துவிடுவீர்கள்.

நீங்களும் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யாமலிருக்க விரும்பினால் அல்லது பணம் படைத்தவராக ஆக வேண்டும் என்பதிலிருந்து உங்கள் கவனம் சிதறாமலிருக்க, நிதி தொடர்பாக உங்களை முடிவெடுக்கத் தூண்டிய அந்தக் காரணத்தைப் பற்றி யோசியுங்கள். உதாரணமாக, உங்களிடம் ஏற்கெனவே ஒரு கார் இருக்கிறது என்றால், நீங்கள் ஏன் மற்றொரு காரை வாங்கவேண்டும்... உங்களை மற்றொரு கார் வாங்கச் செய்யும் காரணம் என்ன... அது அவசியமானதுதானா அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் அனைவரும் இந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவா?- பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நம் அன்றாட வாழ்க்கையின் முக்கியமான பணி. நாம் செய்யும் சிறு தவறுகள்கூட நம் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதற்கு சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 'சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும்' என்பது சிவாவின் லட்சியம். பல நல்ல வீடுகள் விலைக்கு வந்தபோதும் 'இதைவிட நல்ல வீடு கிடைக்கும்' என்று நினைத்து மறுத்துவிட்டார். ஆனால், விலை கடுமையாக உயர ஆரம்பிந்த பிறகு, அவசரமாக ஒரு வீடு வாங்கினார். அதனால் சிவா அடைந்த நஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பதற்றத்தில், அவசரத்தில் எடுக்கப்படும் முடிவு சரியாக இருக்காது என்பதற்குத்தான் இந்த உதாரணம்.

பதற்றத்தில் முடிவெடுக்கக் கூடாது என்பதற்காக நிறுத்தி, நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் வாய்ப்பும் பல நேரங்களில் நமக்கு வாய்க்காது. ஆக, நிதி தொடர்பான விஷயங்களில் சரியான முடிவை எப்படித்தான் எடுப்பது? பின்வரும் ஐந்து அம்சங்களைச் சரியாக உணர்ந்துகொண்டு, அவற்றைச் செயல்படுத்தினால் நிதி தொடர்பான விஷயங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்க அவை நிச்சயம் உதவும்.


Recommend For You

Post Top Ad