கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!! - Asiriyar.Net

Post Top Ad

Friday, December 27, 2019

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

புற்றுநோயை ஆரம்பத்திலே அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு இருதய நோயினை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலையை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர உடலில் உள்ள சூடு நீங்கும். பரம்பரையாக வரும் முடி நரைத்தலை தடுக்கலாம்.

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்

கண் பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இருதயம், நுரையீரல், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

கடுகு மற்றும் கறிவேப்பிலை கலந்த கலவை நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இது பயன்படுகிறது.

குரலை இனிமையாக்கவும், ஞாபக சக்தியை பெருக்கவும் கறிவேப்பிலை பயன்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் இனிமேலாவது சாப்பிட்டு மேற்கண்ட நோய் வராமல் காப்போம்.

Recommend For You

Post Top Ad