மனநிலை சரியில்லாத தாய், 'நாசா' செல்ல தகுதியான மாணவி.! பணமில்லாமல் பரிதவிப்பு.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 19, 2019

மனநிலை சரியில்லாத தாய், 'நாசா' செல்ல தகுதியான மாணவி.! பணமில்லாமல் பரிதவிப்பு.!






தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு நாசா செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில்., இந்த வாய்ப்பினை உபயோகம் செய்து கொள்ள பணமின்றி தவித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சோந்த கருப்பையா - அழகுவள்ளி தம்பதியின் மகள் கே. ஜெயலட்சுமி. இவா் புதுக்கோட்டை ராணியாா் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். படிப்பில் சுட்டியாக இருந்து வரும் ஜெயலட்சுமி, இப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் மற்றும் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.


ஜெயலட்சுமியின் தாய் மனநிலை சரியில்லாதவர், இதனால் அவரது தந்தை இவர்கைளை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.



அக்கம் பக்கத்தினர் செய்யும் உதவி மட்டுமே ஜெயலட்சுமி இல்லத்தின் முக்கிய வருமானமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோபர்க்குரு என்ற இணையம் மூலமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு திருச்சியை சார்ந்த தான்யா என்ற மாணவி வெற்றிபெற்று நாசா செல்லும் வாய்ப்பை பெற்றது குறித்த செய்தியை நாளிதழ் மூலமாக படித்துள்ளார்.

இதனையடுத்து நாசாவிற்கு செல்ல விருப்பப்பட்டு இப்போட்டிக்கு விண்ணப்பித்து., தமிழ் மொழியில் படித்து வந்தாலும் ஆங்கிலத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்போட்டியின் முடிவுகள் வெளியான நிலையில்., ஜெயலட்சுமி இப்போட்டியில் தேர்வாகி நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார்.

நாசாவிற்கு செல்ல ஆகும் செலவை இணைய நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நிலையில்., நாசாவிற்கு செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து ரூ. 1.63 லட்சம் ஆகும் என்ற நிலையில். படிப்பிற்கே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு ஜெயலட்சுமி பயின்று வரும் நிலையில்., இவ்வுளவு தொகையை செலவு செய்ய இயலாது என்று அமைதிகாத்துள்ளார்.

இவரை பற்றி நன்கு அறிந்த அக்கம் பக்கத்தினர் தங்களால் இயன்ற அளவு உதவி செய்துள்ள நிலையில்., பாஸ்போர்ட் போன்றவை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும்., இது குறித்த விபரத்தை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனுவும் கொடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி தெரிவித்த சமயத்தில்., எனது தாயும் - தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோபர்க்குரு போட்டியின் மூலமாக எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில்., பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி., எதற்காக பாஸ்போர்ட் வாங்குகிறீர்கள் என்று வினவினார்.

நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு குறித்தும்., எனது குடும்ப சூழ்நிலை குறித்தும் தெரிவித்து., நான் கட்டாயம் செல்வேனா என்பதும் எனக்கு தெரியாது, முயற்சியாக செய்கிறேன் என்று தெரிவித்தேன். இதனை அறிந்த அதிகாரி ரூ.500 கொடுத்து உதவி செய்தார்.

இதற்கிடையே, மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி பணியாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ரூ. 65 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி முன்னிலையில் ஓஎன்ஜிசி துணைப் பொது மேலாளா் ச. ஜோசப் ராஜ் ரூ. 65 ஆயிரம் நிதியை வழங்கினாா்.

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் சாா்பில் கட்செவி அஞ்சலில் நிதி திரட்டும் பணிகள் தொடங்கின. இதன் விளைவாக, குழந்தைகள் நல மருத்துவா் எஸ். ராமதாஸ் 10 ரூபாய் ஆயிரம் உள்பட பல்வேறு ஆா்வலா்கள் நேரடியாக மாணவி ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ. 40 ஆயிரம் வரை செவ்வாய்க்கிழமை மாலை வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் உதவி எதிா்பாா்க்கப்படுவதாகவும் எழுத்தாளா் நா. முத்துநிலவன் தெரிவித்தாா்.

e மேலும் விவரங்களுக்கு, 70948 16102 என்ற எண்ணில் மாணவியைத் தொடா்பு கொள்ளலாம்.

மாணவியின் வங்கி விவரங்கள்:

Name: K.Jayalakshmi, Account number:121901000019873,
Bank name:IOB, Perungalur,
Pudukkottai District,
Tamilnadu. IFSC:IOBA0001219,MICR code:622020021



Post Top Ad