நீங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரா? இதை மட்டும் படித்துக்கொள்ளுங்கள் போதும்! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, December 26, 2019

நீங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரா? இதை மட்டும் படித்துக்கொள்ளுங்கள் போதும்!
தேர்தல் நடைபெறும் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்

வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும் .

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வரவில்லை எனில் வாக்குச்சாவடி அலுவலர் - 1 வாக்குச் சாவடி தலைமை அலுவலராக பொறுப்பேற்க வேண்டும் .

வாக்குச் சாவடியின் முன்பாக வேட்பாளர் சின்னத்துடன் கூடிய விவரம் சுவரொட்டி ஒட்ட வேண்டும் . வாக்குப்பதிவு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக வாக்குச் சீட்டுகளின் பின்புறம் கையெழுத்திட வேண்டும் . ( 100 சீட்டுகளில் மட்டும் )
* அடிச்சீட்டின் பின்புறத்தில் கையெழுத்திடக் கூடாது .

வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பதிவு நேரத்திற்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் . வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக முகவர்கள் தங்களது நியமனம் கடிதம் காட்டி உறுதி மொழி ஏற்றுக் கொண்டு கையொப்பம் பெறப்பட வேண்டும் .
* முகவர்களுக்கு அடையாளச் சீட்டு வழங்க வேண்டும் .
* ஒரு வேட்பாளருக்கு இரண்டு முகவர்கள் . ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடியின் உள்ளே இருக்க வேண்டும் .

Recommend For You

Post Top Ad