பள்ளி முதல்வர், ஆசிரியைகள் மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவர்கள், பெற்றோர் மீதும் வழக்கு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, December 18, 2019

பள்ளி முதல்வர், ஆசிரியைகள் மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவர்கள், பெற்றோர் மீதும் வழக்கு

கோவையில் முதல்வர், ஆசிரியை கள் மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவர்கள் மற்றும் அவர்க ளின் பெற்றோர் மீதும் சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சூலூரில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளியில், இரு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக அவர்களின் தாய் அளித்த புகாரின் பேரில், பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது சூலூர் காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.


இதற்கிடையே, பள்ளியின் (பொறுப்பு) முதல்வர் நாகேந்திரன் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,'ஒழுங்கீனம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரும், அதே பள்ளியில் படித்துவரும் அவரது சகோதரரும் கடந்த 16-ம் தேதி முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். இவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

அதன் பேரில், சம்பந்தப்பட்ட மாணவர்கள், அவரது பெற்றோர் ஆகிய 4 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்ற னர்.

ஆட்சியரிடம் புகார்

இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ஆட்சியரின் நேரடி உதவி யாளரைச் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விசாரணையின்றி வழக்குப் பதிவு

சம்பந்தப்பட்ட பள்ளியில் 2,500-க்கும் மேற்பட்டோர் படிக்கின் றனர். மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை எவ் வித விசாரணையும் நடத்தாமல் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர். இதனால் பள்ளி யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் பள்ளியில் தவறு இழைத்துள் ளனர். இருப்பினும் அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என முதல் வர், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். முதல்வர், ஆசிரியைகள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.


Recommend For You

Post Top Ad