உடல்நிலை சரியில்லாத நிலையிலும் NISHTA பயிற்சியில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தியது காரணமாக ஆசிரியை மரணம்!! - Asiriyar.Net

Post Top Ad

Monday, November 4, 2019

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் NISHTA பயிற்சியில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தியது காரணமாக ஆசிரியை மரணம்!!
*_இரங்கல் செய்தி_*

*⚫வேலூர் கல்வி மாவட்டம் சார்பில் வேலூரில் 01.11.2019  வியாழக்கிழமை முதல் தொடங்கிய இரண்டாம் கட்ட NISTHA பயிற்சியில் கலந்து கொண்ட அணைக்கட்டு ஒன்றியம், ஏரிப்புதூர் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை _எஸ்.ஜகத் ஜனனி_ அவர்கள் முதல் நாள் உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காமல் பார்வைக்கு யாராவது அதிகாரிகள் வந்தால் யார் பதில் சொல்வது, என்று கூறி இங்கேயே ஓய்வு எடுங்கள்  என்று அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் பயிற்சி மைய நிர்வாகிகள்.*


*⚫மீண்டும் அதே பயிற்சியில் வெள்ளிக்கிழமையும் உடல்நிலை சரியில்லை என்று சொன்ன பிறகுதான் அனுப்பியுள்ளனர். அதுவும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து அவருடைய கணவரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.*

*⚫அந்த மன உளைச்சல் தாங்காமல் மறுநாள் (03.11.19) காலை  அந்த ஆசிரியை மரணமடைந்துவிட்டார்.*

*⚫இது முழுக்க முழுக்க அந்தப் பயிற்சி மைய நிர்வாகிகளின் அலட்சியமான சர்வாதிகாரமான போக்குதான் இந்த ஆசிரியரின் மரணத்திற்கு முழு காரணம்.*

*⚫உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு உடனடி தேவை ஓய்வா இல்லை உடனடி சிகிச்சையா என்று கூட தெரியாத இந்த நிர்வாகம் தான் அந்த ஆசிரியரின் இழப்பிற்கு முழு பொறுப்பு.*

*⚫முதல் நாளே சிகிச்சைக்கு அனுப்பி இருந்தால் அவரது குடும்பம் இன்று நடுத்தெருவில் நின்று இருக்காது. அவரது மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இன்று தாயை இழந்து தவிக்கின்றனர்.*

*⚫வேலூர் மாவட்டத்தில் அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று சர்வாதிகாரமாக, சிறைக் கைதிகளைப் போல ஆசிரியர்களை நடத்தி செயல்படுகின்றனர் பயிற்சி மைய நிர்வாகிகள்.*

*⚫திருமதி.ஜகத் ஜனனி ஆசிரியையின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*⚫மேலும் திருமதி.ஜகத் ஜனனி மரணத்திற்கு காரணமான பயிற்சி மைய  நிர்வாகிகள் அனைவரின் மீதும் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.*

_குறிப்பு:_

*_திருமதி.ஜகத் ஜனனி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இன்று (04.11.2019) NISHTA  பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை (Badge) அணிந்து கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்._*

😪கண்ணீருடன்;


*_அமர்நாத்_*
*மாவட்டச் செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*வேலூர்.*

Recommend For You

Post Top Ad