புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 6, 2019

புதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி வெவ்வேறு ஊதியம்





பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது. இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைக்கப்படுவது டன், ஒரே பதவி வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது,நவம்பர் 18 இல் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மாற்றங்கள் குறித்து மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக நான்கு வருடப் பட்டப்படிப்பு கூடுதலாகத் துவக்கப்பட உள்ளது. ’பேட்ச்லர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)’ அல்லது ’பேச்லர்ஸ் ஆஃப் லிப்ரல் எஜுகேஷன்(பிஎல்இ)’ எனும் பெயரில் இது அழைக்கப்படும். இக்கல்வியை நான்கு வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையிலேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கானசான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்படுவர். 

அதாவது, முதல் வருடம் முடித்தவர்களுக்கு டிப்ளமோ, இரண்டாம் வருடம் அட்வான்ஸ் டிப்ளமோ, மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு மற்றும் முழு நான்கு வருடம் முடித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் இணைந்து ஆய்வு செய்யலாம். தற்போது, முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே உயர்கல்வியில் தம் ஆய்வை தொடரும்நிலை உள்ளது. துவக்க ஆய்வாகஉள்ள எம்.பில் எனும் உயர்கல்விக்கான ஒருவருடப் பட்டப்படிப்பு தேவைஇல்லை எனக் கருதி நிறுத்தப்பட்டுவிடும்.



Post Top Ad