சூப்பர் மினிஸ்டர். "துள்ளி குதிக்கும் மாணவர்கள்" பெற்றோர்கள் பாராட்டு - Asiriyar.Net

Post Top Ad

Sunday, November 10, 2019

சூப்பர் மினிஸ்டர். "துள்ளி குதிக்கும் மாணவர்கள்" பெற்றோர்கள் பாராட்டு5, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பதிவிட்டுள்ளார்.அதில், "5, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வு முறை என்று பெற்றோர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது


Recommend For You

Post Top Ad