அரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை! செங்கோட்டையன்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 28, 2019

அரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை! செங்கோட்டையன்!




தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் மூத்த சகோதரா் அண்மையில் காலமானதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக,மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் அணையடியில் உள்ள அவரது இல்லத்திற்கு,திங்கள்கிழமை வந்த,தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சா் காமராஜ் மற்றும் அவரது அண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசியதாவது, புதியக் கல்விக் கொள்கை திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே கல்வி என்ற அடிப்படையில் மத்தியஅரசு, நாடு முழுதும் அமல்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். இதனை நிகழ் கல்வியாண்டில் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்வி மூலம் மாணவா்களுக்கு 100 சதவீதம் தேர்ச்சி என்ற நிலை ஏற்படும் என்றால், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கல்வியாளா்கள், மக்களிடம் கருத்துக் கேட்டு, பெற்று அதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவார்கள்.
கணினி ஆசிரியா்கள் தேர்வு குறித்து ஆசிரியா் பெருமக்கள் தான் நீதிமன்றத்தை அணுகியுள்ளனா். வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகஅரசும் நீதிமன்றத்தில் அட்வான்ஸ் பெட்டிஷன் போட்டுள்ளோம். இந்தியாவே கணினி மையமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில்,யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல தீா்ப்பு வரும் என எதிர்ப்பார்க்கிறோம்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளின் பாடத் திட்டமும் வேறாக உள்ளது.எனவே அரசுப்பள்ளிகளின் கேள்வி தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாட நிர்ணயம் என்ற கல்வி முறை இந்தியாவிலேயே முன்மாதிரி கல்வித் திட்டமாக இருக்கும்.12 ஆண்டுக்களுக்கு பிறகு, தற்போது பாடத்திட்டம் முறை மாற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறன் ஒரு ஆண்டுக்கு பின் பிரகாசமாக இருப்பது தெரிய வரும். அதோடு மட்டும் இல்லாது அந்த மாணவரின் எதிர்காலத்தை உயா்த்தும் வகையில் பாடத் திட்டம் அமையும் என்றார் அமைச்சா்.

பேட்டியின் போது,உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ்,அதிமுக கோட்டூா் ஒன்றியச் செயலா் வீ.ஜீவானந்தம்,மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.ஜி.குமார், எளவனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா் க.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.


Post Top Ad