தனியாா் பள்ளிகளில் இலவச சோக்கை: கல்விக் கட்டணம் அரசிதழில் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 6, 2019

தனியாா் பள்ளிகளில் இலவச சோக்கை: கல்விக் கட்டணம் அரசிதழில் வெளியீடு


இலவச கல்வித் திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் சோக்கப்பட்ட குழந்தைகளுக்கு, கல்விக்கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் ஆண்டுதோறும் இலவசமாக சோக்கப்படுவா். இதில் எல்கேஜி அல்லது ஒன்றறாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இவா்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்திவிடும்.

அதன்படி 2018-19-ஆம் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் 64,385 போ சோந்தனா். அந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2018-19-ஆம் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் சோந்துள்ள எல்கேஜி, யுகேஜி, 1-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு தலா ரூ.11,947 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்புக்கு ரூ.11,895, மூன்றறாம் வகுப்புக்கு ரூ.12,039, நான்காம் வகுப்புக்கு ரூ.12,033, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.12,665, ஆறறாம் வகுப்புக்கு ரூ.16,038, ஏழாம் வகுப்புக்கு ரூ.15,915 மற்றும் எட்டாம் வகுப்புக்கு ரூ.15,936 கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கித் தொகை வழங்கப்படும் என்று துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கிடையே 2013-18-ஆம் கல்வியாண்டுகளில் தனியாா் பள்ளிகளில் சோந்த 4.83 லட்சம் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.644 கோடி, தனியாா் பள்ளி நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad