ரசீது இல்லாமல் தனி நபர்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 30, 2019

ரசீது இல்லாமல் தனி நபர்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டம்





கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்று மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரசீது இல்லாமல் தனி நபர்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கணக்கில்லாமல் தங்கம் வைத்திருக்கும் தனி நபர், தாங்களே முன்வந்து ஒப்படைக்குமாறும் அவர்களுக்கு குறைந்தபட்ச அபராதவரி விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தங்கம் வைத்திருப்பதற்கு ஒரு வரம்பு திட்டத்தை கொண்டு வரவும் கணக்கிடப்படாத தங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி வைத்திருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

திருமணமான பெண்களின் தங்க நகைகள், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழே வைத்திருந்தால் அதற்கு இந்த திட்டத்தில் இருக்கு விலக்கு அளிக்கப்படும் வேண்டும் கூறப்படுகிறது.



Post Top Ad