அடிக்கடி ஸ்வீட் சாப்பிட தோணுதா? அப்ப உங்களுக்கு இந்த நோய்லாம் வர வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 12, 2019

அடிக்கடி ஸ்வீட் சாப்பிட தோணுதா? அப்ப உங்களுக்கு இந்த நோய்லாம் வர வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க...





சிலர் இனிப்பு பலகாரங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவர். இப்படிப்பட்டவர்களுக்கு எந்நேரமும் ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரத்தை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை ஒருவர் அதிகமாக உட்கொண்டால், அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இனிப்புக்களை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் மற்றும் உடல் பருமனாகும் என்பது தெரியும். ஆனால் இதைத் தவிர இன்னும் பல கொடிய நோய்களும் தாக்கக்கூடும் என்பது தெரியுமா?

எனவே இனிப்புக்களை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள், அதைக் கட்டுப்படுத்துவதோடு, மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.


இந்த கட்டுரையில் சர்க்கரை கலந்த இனிப்பு பலகாரங்களை ஒருவர் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதை எப்படிக் குறைப்பது எனவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
சர்க்கரை நோய்
சர்க்கரை உடல் பருமனை உண்டாக்குவதோடு, சர்க்கரை நோயை உண்டாக்கும் ஆபத்துக் காரணிகளுள் ஒன்றாகும். ஒரே இடத்தில் அமர்ந்து உடலுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் வேலை செய்பவர்களது உடலில் பல்வேறு வளர்சிதை மாற்ற மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, அதனால் உடலில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது மற்றும் கணைய செல்களை மோசமாக்குகிறது. இதன் விளைவாக சர்க்கரை நோயால் எளிதில் பாதிக்கப்பட நேரிடுகிறது.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
மாரடைப்பு

யார் ஒருவர் அதிகமாக சர்க்கரையை சாப்பிடுகிறார்களோ, அவர்களது உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது மாரடைப்பு வராமல் பாதுகாக்கும். எப்போது ஒருவரது உடலில் ட்ரை-க்ளைகோசைடுகள் அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளதோ, அப்போது மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கிறது.



ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
கல்லீரல் நோய்கள்

சர்க்கரையில் புருக்டோஸ் உள்ளது. புருக்டோஸை ஒருவர் உட்கொள்ளும் போது, அது கல்லீரலில் சென்று, உடலுக்கு வேலை கொடுக்க கொடுக்க, அது ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. எப்போது ஒருவர் உடலுக்கு போதுமான வேலை கொடுக்காமல், சர்க்கரையை அதிகம் சாப்பிடுகிறாரோ, அப்போது கல்லீரலில் புருக்டோஸ் தேங்க ஆரம்பித்துவிடும். அதன் பின் கல்லீரல் அந்த புருக்டோஸை கொழுப்புக்களாக மாற்ற ஆரம்பிக்கும். இதன் விளைவாக கல்லீரல் கொழுப்பின் அபாயம் அதிகரித்து, நாளடைவில் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கிவிடும்.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
புற்றுநோய்


இன்று உலகில் நிறைய பேரின் மரணம் புற்றுநோயால் தான் உள்ளது. புற்றுநோயை உண்டாக்குவதில் இன்சுலின் ஹார்மோன் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்போது ஒருவரது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும் என பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, சர்க்கரை பல்வேறு வளர்சிதை மாற்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும் என்பதால், அதுவும் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
பல் பிரச்சனைகள்

எப்போது உடலுக்கு ஒரு பொருளின் மூலம் அத்தியாவசிய கொழுப்பு, வைட்டமின்கள் அல்லது கனிமச்சத்துக்கள் கிடைக்கிறதோ, அதிலிருந்து கிடைப்பது சுத்தமான ஆற்றல். அதிகளவு சர்க்கரையில் கலோரிகள் அதிகமாக உள்ளதே தவிர, அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் எதுவும் இல்லை. இம்மாதிரியான கலோரிகள் வெற்று கலோரிகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஒருவர் சர்க்கரையில் இருந்து 10-20% கலோரிகளைப் பெற்றால், அவர்களுக்கு நிச்சயம் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, சர்க்கரையில் உள்ள புருக்டோஸ், தொடர்ச்சியாக பற்களில் படும் போது, அது பற்களை பாதித்து, பல பல் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.



ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
உடல் பருமன்


சர்க்கரையில் சுக்ரோஸ், புருக்டோஸ் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சர்க்கரை உடலின் மெட்டபாலிசத்தைக் குறைக்கும். ஆகவே தான், சர்க்கரையை அதிகம் சாப்பிடுபவர்கள், உடல் பருமனால் அவஸ்தைப்படுகிறார்கள்.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
இதர மனநல பிரச்சனைகள்

லெப்டின் எதிர்ப்பிலும் சர்க்கரை பங்களிக்கிறது. இதனால் எடை அதிகரிப்பு, பசி மற்றும் தூக்க பிரச்சனை போன்றவற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, அதிகளவு சர்க்கரையை உட்கொண்டால், அது நினைவாற்றலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதாவது அடிக்கடி ஞாபக மறதியை உண்டாக்கும்.


ஸ்வீட் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்கள்!
இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள்:

* மைதா, செயற்கை சர்க்கரை, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளை உண்பதைக் குறைக்கவும்.

* சோடா, குளிர் பானங்கள், பிஸ்கட், சாக்லேட் சாப்பிடுவதைக் குறைக்கவும்.

* புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்ணவும்.

* கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதாக இருந்தால், ஸ்டார்ச் அதிகம் நிறைந்த காய்கறிகளைத் தவிர்க்கவும்.

* மன அழுத்தத்தைக் குறைக்கவும். இல்லாவிட்டால், அது அதிகளவு இனிப்புக்களை சாப்பிடத் தூண்டும்.

* இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும். இதனால் நள்ளிரவில் எழாமல், கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடாமல் இருக்கலாம்.

Post Top Ad