ATM போலவே AHM கருவி !! 58 நோய்களை கண்டறியும் மெஷின்!! முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 7, 2019

ATM போலவே AHM கருவி !! 58 நோய்களை கண்டறியும் மெஷின்!! முழு விவரம்




ஏ.டி.எம். போலவே செயல்படும் இது உண்மையில் ஒரு ஏ.ஹெச்.எம். மெஷின் ஆகும். அதாவது, AHM எனப்படும் Anytime Health Monitoring System என்கிற மெஷின்தான் இது.

இந்த AHM கருவியின் உதவியுடன் டெங்கு, சிக்குன்குனியா, இரத்தத்தில் குளூகோஸ் அளவு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச்.ஐ.வி., மலேரியா, சிறுநீர், ஈ.ஸி.ஜி. உள்ளிட்ட  58 வகையான மருத்துவப் பரிசோதனைகளை நாம் சோதித்துத் தெரிந்து கொள்ளலாம். 

ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று நாம் பணத்தை எடுத்துக் கொள்வதுபோல், AHM மையங்களுக்குச் சென்று நமக்கு இந்நோய்கள் உள்ளதா எனப் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏ.டி.எம்.மில் உடனடியாகப் பணம் வருவதுபோல், இந்த மெஷினும் உடனேயே சோதனை முடிவுகளை பிரிண்ட் எடுத்துக் கொடுத்துவிடும்.

ஓரளவு கம்ப்யூட்டர் அறிவு இருக்கும் யாரும் இந்த மெஷினைப் பயன்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நவீன ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனமான Sanskritech Smart Solutions Private Limited இந்த AHM மெஷினைக் கண்டுபிடித்துள்ளது.

நாம் சுயமாக, எளிதாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள உதவும் இவ்வகையான மெஷின் இந்தியாவிலேயே முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் AHM மெஷின்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக மேற்கண்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏ.டி.எம்.கள் போலவே இந்த மெஷினையும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி மால்கள், ஏர்போர்ட்டுகள், தொழிற்சாலைகள் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம், இடம் உள்ளிட்ட விவரங்களை செலுத்தி, நம் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகையையும் பதிந்து AHM மெஷினில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

AHM மெஷினில் இந்த 3 விதமாக நாம் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்: 1) Health Check up, 2) Consult Doctor & 3) Health History.

1) Health Check up:
> ஏற்கனவே தெரிவித்தபடி, 58 வகையான நோய்கள் தொடர்பாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
> PDF வடிவில் கிடைக்கும் சோதனை முடிவுகளை உடனே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
> அந்த PDFஐ நம் இ-மெயிலுக்கும் அனுப்பிக் கொள்ள முடியும்.

2) Consult Doctor:
> வீடியோ மூலம் ஒரு மருத்துவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
> மருத்துவப் பரிசோதனை முடிவுகளின்படி, மருத்துவர் நமக்கு ஆலோசனைகளை வழங்குவார்.

> தேவைப்பட்டால், மருத்துவமனையில் தருவது போன்ற ஒரு மருந்துச்சீட்டையும் அவர் வழங்குவார்.
> அந்த மருந்துச்சீட்டை நாம் நம் அக்கவுண்ட்டில் சேமித்து வைக்கவும் முடியும்.

3) Health History:
> சேமித்து வைத்துள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகளை நாம் எப்போது வேண்டுமானாலும் இம்மெஷினில் நுழைந்து பார்த்துக் கொள்ள முடியும்.
> மருத்துவர்கள் அளித்த மருந்துச்சீட்டையும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
> நாம் வெளியிலிருந்து எடுத்துவரும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளையும் இந்த மெஷினிலேயே நம் அக்கவுண்ட்டில் சேர்த்துக் கொள்ள வசதியுண்டு.

Post Top Ad