ஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 20, 2019

ஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்!





ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒரு ஆட்டம் கண்டது என்பது உண்மையே. எனினும் ஜியோவுடன் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிறுவனங்கள் எப்படி ஜியோ மட்டும் இப்படி அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றும் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தான், ஐ.யூ,சி பிரச்சனை தெரிய வந்தது.

இந்த நிலையில் கையும் களவுமாக பிடிபட்ட ஜியோவால் எதுவும் செய்ய முடியாத நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஐயூசி கட்டணத்தை விதித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இலவச சேவைகளை அனுபவித்து வந்தவர்கள், இனி அந்த சேவையை பெற முடியாது என்பதாலேயே கடுப்பில் இருந்த வாடிக்கையாளர்கள் இனி, பலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறலாம் என்றும்
கூறப்படுகிறது.



முன்னதாக எந்தவொரு இலவச அழைப்புகளும் கிடையாது என்ற பெரிய குண்டாக போட்ட ஜியோ, தற்போது சத்தமேயின்றி தனது 19 ரூபாய் மற்றும் 52 ரூபாய் மதிப்பிலான சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன திட்டம்?
என்ன திட்டம் அது?
ஒரு புறம் ஏற்கனவே ஐயூசி கட்டணம் விதித்துள்ள நிலையில், தற்போது சத்தமில்லாமல் இந்த இரு சிறிய பேக்குகளையும் நீக்கியுள்ளது. இதில் 19 ரூபாய் பேக்கானது ஒரே ஒரு நாளுக்கு செலுப்படியாகும். இதே 52 ரூபாய் பேக் 7 நாளுக்குக்கு செல்லும். இந்த நிலையில் இனி வாடிக்கையாளர் இந்த பேக்கினை ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், இனி ஜியோ வாடிக்கையாளர்கள் ஆரம்ப திட்டமாக 98 ரூபாய்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து பயன் பெற முடியும் என்றும் கூறியுள்ளது.

நிர்பந்தம்
ரீசார்ஜ் செய்ய நிர்பந்தம்

ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள ஐயூசி டாப் அப்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ் என் எல் நிறுவனங்களுக்கு கால் செய்ய வேண்டுமெனில் 10 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐயூசி டாப் அப்களுடன் சேர்த்து, இந்த சிறிய பேக்குகளையும் ரீசார்ஜ் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதாலேயே இதை நீக்கியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.


என்ன பலன்?
சிறிய காம்போ திட்டத்தினால் என்ன பலன்?

இந்த சிறிய காம்போ திட்டங்கள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயன் 19 ரூபாய்க்கு வரம்பற்ற இலவச அழைப்புகள், இது தவிர 150 எம்.பி 4ஜி டேட்டா மற்றும் 20 இலவச எஸ்.எம்.எஸ்கள் இலவசம் என்றும் கூறப்பட்டது. இந்த நன்மைகள் 1 நாளைக்கு மட்டுமே செல்லும் என்றும் கூறப்பட்டது. இதே 52 ரூபாய் திட்டத்தில் 1.05 ஜிபி டேட்டா, 7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் 70 எஸ்.எம்.எஸ்கள் என அசத்திய நிலையில், இனி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற சலுகைகளை அனுபவிக்க முடியாது என்பது உண்மையே. இது தவிர இந்த சிறிய பேக்குகள் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற அணுகலையும் வழங்குகிறது.



இனி இது தான்?
இது செயல்பாட்டில் இது தான் இருக்கும்?

இந்த சிறிய பேக்குகள் அகற்றத்தால் ரிலையன்ஸ் ஜியோவின் 98 ரூபாய் காம்போ பேக்குகளை மட்டுமே மக்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் இலவச அழைப்புகள் மற்றும் 300 இலவச எஸ்.எம்.எஸ்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிறிய அளவில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி அந்த பிளான்களை பெற முடியாது என்றும், இது ஜியோவின் சிறிய வாடிக்கையாளர்க்கு பெறும் பின்னடைவை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Post Top Ad