விண்டோஸ் 10 கணினிகளில் ஆண்ட்ராய்டு நோட்டிஃபிகேஷன்களை பெறுவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 7, 2019

விண்டோஸ் 10 கணினிகளில் ஆண்ட்ராய்டு நோட்டிஃபிகேஷன்களை பெறுவது எப்படி?




ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் சாதனங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் எனலாம். இவ்வாறு செய்யும் போது நோட்டிபிகேஷன்கள், தவறிய அழைப்புகளை பார்க்காமல் போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அடிக்கடி ஸ்மார்ட்போனினை சரிபார்ப்பது நல்ல விஷயமாக இருக்கும். எனினும், லேப்டாப் அல்லது கணினிகளில் நோட்டிபிகேஷன்களை பெற வழிமுறைகள் இருக்கின்றன.


விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்களை மிரர் செய்வது எளிமையான விஷயமாக இருக்கும்.


இவ்வாறு செய்யும் போது குறுந்தகவல்கள் முதல் நோட்டிபிகேஷன் வரை அனைத்தையும் கணினி அல்லது லேப்டாப் திரையில் பார்க்க முடியும். இவ்வாறு செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், இதனை எளிமையாக மேற்கொள்ளும் இரு வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

முதல் வழிமுறைக்கு மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மற்றும் கார்டனா செயலியை பயன்படுத்த வேண்டும். மற்றொரு வழிமுறைக்கு புஷ்புல்லெட் சேவையை பயன்படுத்த வேண்டும்.

1 - மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு விண்டோஸ் 10 தளத்தில் நோட்டிபிகேஷன்களை பெறுவதற்கான வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு மற்றும் கார்டனா செயலிகளிடையே சின்க்ரோனைஸ் செய்ய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து விண்டோஸ் 10 கணினிகளில் நோட்டிபிகேஷன்களை பெற முடியும். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1: ஸ்மார்ட்போனில் கார்டனா செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: கார்டனா செயலியை லான்ச் மற்றும் செட்டப் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு சைன்-இன் செய்ய வேண்டும். இதற்கு விண்டோஸ் 10 கணினியில் உள்ள அக்கவுண்ட்டையே பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை 4: ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்து மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 5: கணினி திரையில் பாப் அப் ஆகும் சின்க் நோட்டிபிகேஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 6: கணினியில் பாப் அப் ஆகும் நோட்டிபிகேஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்.

வழிமுறை 7: விண்டோஸ் 10 கணினியில் கார்டனா சேவையை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது சாதனம் நோட்டிபிகேஷன் பேனலில் தெரியும். இனி உங்களது ஸ்மார்ட்போனின் நோட்டிபிகேஷன்கள் விண்டோஸ் 10 கணினியில் தெரியும்.


2 - புஷ்புல்லெட் சேவையை கொண்டு விண்டோஸ் 10 தளத்தில் நோட்டிபிகேஷன்களை பெறுவதற்கான வழிமுறைகள்

நோட்டிபிகேஷன்களை கணினிகளில் மிரர் செய்யும் சேவை வழங்கும் சேவையை புஷ்புல்லெட் செயலி வழங்குகிறது. இது ஒவ்வொரு செயலிக்கான நோட்டிஃபிகேஷன்களையும் வழங்காது என்ற போதும், இதை கொண்டு அழைப்புகளை கணினியில் திரையில் இருந்து மேற்கொள்ள முடியும்.

வழிமுறை 1: புஷ்புல்லெட் செயலியை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: புஷ்புல்லெட் எக்ஸ்டென்ஷனை குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: ஆண்ட்ராய்டு சாதனத்தில் புஷ் புல்லெட் செயலியை திறந்து கூகுள் அக்கவுண்ட் கொண்டு சைன்-இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: கூகுள் அக்கவுண்ட் கொண்டு சைன்-அப் செய்து சேவைக்கு தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

வழிமுறை 5: எக்ஸ்டென்ஷன் பக்கத்தில் இருந்து அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


வழிமுறை 6: இனி அழைப்பகளின் போது நோட்டிபிகேஷன்களை கணினி திரையில் பார்க்க முடியும்.


Post Top Ad