SBI வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 20, 2019

SBI வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்!



வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்களை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அக்டோபர் 1, 2019 முதல் தனது சேவைக் கட்டணங்களைச் சற்று மாற்றம் செய்து அமல்படுத்தவிருக்கிறது.

மாதாந்திர சராசரி இருப்பு (MAB) ஐ பராமரிக்காததால் விதிக்கப்படும் கட்டணங்களை கிட்டத்தட்ட 80% குறைக்கவுள்ளது,மேலும் ஒரு மாதத்தில் 8-10 முறை ஏடிஎம்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பண பரிவர்த்தனைகளையும் வழங்க முடிவு செய்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

மேலும் தற்போது, மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திரம் குறைந்தது ரூ .5,000 மற்றும் ரூ .3000 முறையே பராமரிக்க வேண்டும்.

அக்டோபர் 1 முதல், இந்த குறைந்தபட்ச இருப்பு மெட்ரோ நகர்ப்புற பகுதி என இரண்டு ரூ .3,000 ஆக மாற்றப் பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச தொகையை பராமரிக்க இல்லை என்றால் முன்போலவே அபராதத் தொகை விதிக்கப்படும். இருப்பினும் இந்த அபராதம் ரூ .80 ல் இருந்து ரூ .15 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதே சிறப்பம்சமாகும்.

மேலும் வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று பரிவர்த்தனைகள் உட்பட எட்டு இலவச பரிவர்த்தனைகளை வரும் அக்டோபர் ஒன்றில் இருந்து பெறுவார்கள் . பெருநகரங்களில் அல்லாத இடத்தில் அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் 10 இலவச பரிவர்த்தனைகளைப் பெறுகிறார்கள், இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஐந்து.

பணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான்! அதிரடி காட்டும் பிரபல வங்கி

இந்த வரம்பைத் தாண்டிய கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ அபராதமாக ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி ₹ 20 என ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கும்.

Post Top Ad