பரிட்சையில் காப்பி அடிக்காமல் எழுத மாணவர்களுக்கு ஆசிரியர் செய்த வேலையைப் பாருங்கள்..! - Asiriyar.Net

Post Top Ad

Saturday, September 7, 2019

பரிட்சையில் காப்பி அடிக்காமல் எழுத மாணவர்களுக்கு ஆசிரியர் செய்த வேலையைப் பாருங்கள்..!

பரிட்சை அறையில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க அந்த அறையே பலத்த பாதுகாப்பான முறையில் நீண்ட இடைவேளையில் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். ஆசிரியரும் மாணவர்களே யாரும் என்னை ஏமாற்ற முடியாது என வாய் வார்த்தையாக கண்டிப்பார்கள். அதையும் மீறி சில தகவல் பரிமாற்றங்கள் அந்த அறையில் நடப்பது வேறுவிஷயம். இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் மெக்சிகோவைச் சேர்ந்த இந்த ஆசிரியர் செய்த காரியத்தைப் பாருங்கள்.


மெக்சிகோவின் ட்லக்ஸ்கலா (Tlaxcala) என்ற மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பரிட்சை எழுதியுள்ளனர்.


பரிட்சை எழுதும் அறை சிறிய அளவில் இருப்பதால் மாணவர்கள் எளிதில் காப்பி அடிக்கக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு அட்டைப் பெட்டிகளை மாணவர்களின் தலையில் மாட்டிவிட்டு அக்கம் பக்கம் மற்ற மாணவர்களை பார்க்காதவாறு செய்துள்ளார். இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படி நடுவே ஓட்டை வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommend For You

Post Top Ad