வருகை பதிவேட்டில் இப்படியும் குறிக்கலாமே? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 27, 2021

வருகை பதிவேட்டில் இப்படியும் குறிக்கலாமே?

ஒரு இனத்தை அழிக்க, அவர்களுடைய மொழியை அழித்தாலே போதும் என்கிறது மொழியியல் ஆராய்ச்சி. . .


 நாம் வருகை பதிவேட்டில் ஒரு குழந்தை அன்றைய தினம் வந்திருந்தால் " / " குறியும் வரவில்லை என்றால் " இ " எனவும் பதிவேன்.
 இந்தப் பழக்கம் எனக்குத் தாய் ஒன்றியமான மல்லசமுத்திரத்தில் வேலை செய்யும்போது, அங்கு என் சக மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பயன்படுத்தியதைப் போல நானும் பயன்படுத்தினேன்.

 பிறகு காலங்கள் உருண்டோட என் வாசிப்பில் மொழியியல் பற்றி ஒரு புத்தகம் படித்த போது, எனக்கு மொழியியல் பற்றிய புரிதலும். . . நாம் ஏன் அப்படி பயன்படுத்துகிறோம் என்கிற கேள்விக்கு விடையும் கிடைத்தது.
 பயன்படுத்துதலில் ஒரு தெளிவு கிடைத்தது.

 இப்போது இருக்கும் ஒன்றியத்தில் பெரும்பாலும் "  a " போடுவாங்க. . .குழந்தை வரலைன்னா. . .

 ஒரு மொழி அழியாமல் இருக்க அம்மொழி அந்நாட்டின் பேச்சு மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும், வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். 

அதனால் தான் உலகில் பல மொழிகள் அழிந்தபோதும் நம் தாய்மொழி தமிழ் அழியல. . .

 ஏன்மா!    ஒரு குழந்தை வரவில்லை " a " போடு இல்ல " இ " போடு. . .அதுக்கு ஏமா இப்படி அறுக்குற என்று கேட்கும் அன்பு ஜீவன்களுக்கு. . .

 தொடர்ந்து பல வருடங்களாக நம் நாட்டை பலர் ஆட்சி பண்ணிய போதும் அழியாது, நம் மொழி நீடித்ததற்கு காரணம் . . .நாம் பேசும் மொழியாக தமிழை பயன்படுத்தியதன் காரணமாகவே !


சரி அதெல்லாம் விடுங்க. . .

 நம் மாநிலத்தின் ஆட்சி மொழி தமிழ் அதனால் நான் குழந்தைகள் வரலனா வருகை பதிவேட்டில்  "  இ "போடறேன்னு புரிஞ்சுகிட்டேன். 


 நீங்க என்ன போடறிங்கன்னு உங்க புரிதலுக்கு விட்டுடறேன் யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க! ! !


Post Top Ad