TNTET 2019 Result - முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி! தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சி!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 22, 2019

TNTET 2019 Result - முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி! தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சி!!!



ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 82-க்கு மேல் 300 பேரும், 90-க்கு மேல் 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். தகுதித் தேர்வு எழுதியோரில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை கையாண்டுள்ளதாக தெரியவருகிறது.

தேர்வு முடிவுகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில், மொத்த தேர்வு எழுதியோர் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர். மொத்த மதிப்பெண்கள் 150க்கு அதிகபட்சமாக 99ம், குறைந்தபட்சமாக 1 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 2250 பேர். 80க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 843 பேர். 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 72 பேர்.

மொத்த தேர்வு எழுதியோரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 2 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் தாளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் தாள் தேர்வு ஜுன் 9-ம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad