அரசு பள்ளி மாணவர்களுக்கு QR CODE SMART CARD - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 1, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு QR CODE SMART CARD - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு



தமிழக பள்ளி மாணவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே 18 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வி படிக்கும் வரை நிரந்தர எண்ணாக பயன்படுத்தப்பட உள்ளது.

இதில் முதல் இரண்டு இலக்கம் இந்தியா, அடுத்த இரண்டு இலக்கம் தமிழ்நாடு, அடுத்த இரண்டு இலக்கம் அந்தந்த மாவட்டம், அடுத்த இரண்டு இலக்கம் அந்தந்த தாலுகா அடுத்த மூன்று இலக்கம் அந்த மாணவர் படிக்கும் பள்ளி, அடுத்த இரண்டு இலக்கம் எந்த ஆண்டு பள்ளியில் சேர்ந்தது, அடுத்த நான்கு இலக்கம் பள்ளி மாணவருக்கு உரிய எண் என்று பல்வேறு தகவல்களை அடக்கியுள்ளது.தற்போது இந்த எண்ணுடன் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. 


இதில் உள்ள க்யூ ஆர் கோடை அலைபேசி மூலம் ஸ்கேன் செய்தால் மாணவரின் அனைத்து விபரங்களும் தெரிந்துவிடும்.'எமிஸ்' தளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயர், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தந்தை, தாய் பெயர், தொழில், வருமானம், ஆதார் எண், ரத்த வகை, முகவரி, தொலைபேசி எண், போன்ற 16 வகையான தகவல்களையும் இதில் பெற முடியும்.இந்த ஸ்மார்ட் கார்டு தற்போது மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Post Top Ad