கருத்தாய்வு மையைம் ( CRC ) - தமிழக அரசுக்கு "ஆசிரியர் குரல்" வேண்டுகோள்..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 27, 2019

கருத்தாய்வு மையைம் ( CRC ) - தமிழக அரசுக்கு "ஆசிரியர் குரல்" வேண்டுகோள்..!



தமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள்! தமிழக முதலமைச்சர் அவர்களே !கல்வித்துறை அமைச்சர் அவர்களே! கல்வித்துறை செயலர் அவர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம் .வாழ்த்துக்கள்

 கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டுவர தாங்கள் பாடுபடுவது நாங்கள் ஆவலோடு வரவேற்கிறோம்

தங்களது முயற்சிகள் வெற்றி அடைந்து தமிழகம் இந்தியாவிலேயே கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற எங்கள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கடந்த வாரம் மேல்நிலைப் பள்ளிகளை கருத்தாய்வு மையங்களாக மாற்றி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்தாய்வு மைய தலைவராக்கி அவர்கள் அருகில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளிகளை பார்வையிட மாணவர்களின் கற்றல் கற்பித்தல் ஆலோசனை வழங்கலாம் என்பதனையும் நாங்கள் வரவேற்கிறோம்.


 மேனிலைப்பள்ளி என்பது பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் ஆகும். அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வின் சுமையும் பணிச்சுமை மிக அதிகம் அதனால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருகில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு ஆலோசித்தல் போன்ற பணிகளை வழங்கினால் மட்டும் போதும். விடுப்பு மற்றும் அவற்றை அந்தந்த தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரே கவனித்தல் சிறப்பு என கருதுகிறோம்

 மேலும் தற்போது நடுநிலைப்பள்ளிகளில் 6 7 8 வகுப்புகளில் மிகக் குறைந்த அளவு மாணவர்களே உள்ளனர் ஒரே ஊரில் சில மாணவர்கள் அருகில் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் சில மாணவர்கள் அவ்வூரிலுள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் பயின்று வருகிறார்கள். 6 7 8 வகுப்பு மாணவர்கள் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என கட்டாயக் கல்வி விதி கூறுவதால் ஒற்றை இலக்க மாணவர்கள் உள்ள வகுப்புகளுக்கும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என இருப்பதால் பல்வேறு  செலவுகள் அரசுக்கு ஆகிறது .

எனவே முதல்கட்டமாக 6 7 8 வகுப்புக ளை அருகிலுள்ள உயர்நிலை மேல்நிலை பள்ளி உடன் இணைத்து அந்த ஆசிரியர்களை
 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடைநிலை தலைமையாசிரியர் என்று ஆறு ஏழு எட்டு வகுப்புகளை கவனிக்கு மாறும் 9 10 மற்றும் மேல்நிலை வகுப்பு களை இணைப்பின் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கவனித்து மேலும் அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளை கவனிப்பது சிரமம் இருக்காது என கருதுகிறோம்

 கருத்தாய்வு மைய அளவில் பள்ளி தலைமையாசிரியர் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது மாணவர்கள் எண்ணிக்கை ஆசிரியர் எண்ணிக்கை ஆகியவை பொதுமக்கள் விருப்பம் ஆகியவற்றை அறிந்து வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளவாறு மழலை கல்வியுடன் சேர்ந்த தொடக்கப்பள்ளிகளை துவக்க பரிந்துரை செய்யலாம் என எண்ணுகிறோம்

 மேலும் தற்போது புதிய கல்விக் கொள்கையில் 11 12 வகுப்புகள் மாறி ஒன்பதாம் வகுப்பிலிருந்து கலைதிட்டம் இடம்பெறுவதால் அவர்கள் அதனை கவனிப்பது மிக சிறப்பாக இருக்கும்.

 எனவே தமிழக அரசு அடுத்து மழலைக் கல்வி முதல் 5 வகுப்பு வரை தாய்மொழி வழிக்கல்வியில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் நடுநிலைப்பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப நடுநிலை அதாவது ஆறு ஏழு எட்டு வகுப்புகளை அருகில் உள்ள உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் உடன் இணைத்து ஆசிரியர்கள் வளத்தை சிறப்பாக பயன்படுத்தி மேலும் மாணவர்களை சேர்க்க ஆலோசிக்கலாம் என எண்ணுகிறோம்
வட மாநிலங்களைப் போல தமிழகத்தில் கிராமங்கள் நிலை இல்லை புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தொகுப்பு பள்ளிகள் நமக்கு தேவையில்லை என கருதுகிறோம் மேலும் அவ்வாறு ஏற்படும் போது ஒரு வளாகத்தில் ஒன்று இரண்டு தொடக்கப் பள்ளிகளும் ஒன்று இரண்டு மேன் உயர்நிலைப் பள்ளிகளும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளவாறு எதிர்காலத்தில் அமைய மேற்கூறிய கருத்துக்கள் பயனுடையதாக இருக்கும் என எண்ணுகிறோம்
 தற்போது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் அரசிடம் தொடக்க நடு நிலை பள்ளிகள் இணைப்பை கைவிடக் கோரி உள்ளன. எனவே காலத்தின் தேவை இருப்பினும் அதனை சீர்தூக்கி திட்டமிட்டு கிராம சூழ்நிலைக்கும் தமிழக ,சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நாம் அமைப்பின், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளரும் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். எனவே
 மழலைக் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளும் ஆறிலிருந்து பத்து வரை உயர்நிலைப் பள்ளிகளும் 11 12 மேல்நிலைப் பள்ளிகளும் இருக்குமாறு அரசாங்கம் இந்த இணைப்பைப் சிறப்பாக செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம்


வாழ்க கல்வி!!
வளர்க தமிழகம்

Post Top Ad