அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்' - Asiriyar.Net

Post Top Ad

Sunday, August 4, 2019

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'மாணவர்களிடம், பராமரிப்பு கட்டணம் வசூலித்த, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த, விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர், தேவராஜ், 50, பராமரிப்பு கட்டணம் எனக் கூறி, மாணவர்களிடம், பணம் வசூலித்துள்ளார்.


இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நடராஜனிடம் புகாரளித்தனர்.விசாரணையில், தேவராஜ், முறைகேடாக, பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து அவர், தலைமை ஆசிரியர், தேவராஜை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Recommend For You

Post Top Ad