அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு அழைப்பு. - Asiriyar.Net

Post Top Ad

Friday, August 2, 2019

அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு அழைப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது.


ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா,ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த விருதை பெற தகுதி உள்ளவர்கள், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அதிகாரி வழியாக, செப்., 15க்குள்பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Recommend For You

Post Top Ad