அரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக 6 லட்சம் மதிப்பில் இலவச பேருந்து -ஆசிரியர்கள் கிராம மக்கள் ஏற்பாடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 14, 2019

அரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக 6 லட்சம் மதிப்பில் இலவச பேருந்து -ஆசிரியர்கள் கிராம மக்கள் ஏற்பாடு




ஆம்பூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்கள் நலனுக்கு இலவச பேருந்தை கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்தி உள்ளனர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டி மூப்பர் காலனி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடும் அபாயம் ஏற்பட்டது பின்னர் அப்பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் பிரபுதாஸ் மலர் வேந்தன் என்பவர் முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளாக படிப்படியாக மாணவர் சேர்க்கையை கூடுதலாக சேர்த்து தற்போது 133 மாணவர்கள் பயின்று வருகின்றனர் இப்பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் தேவை ஆனால் ஒரே ஒரு தலைமையாசிரியர் மட்டுமே தற்போது உள்ளார் இரண்டு காலிப்பணியிடங்கள் உள்ளது கிராம மக்கள் உதவியுடன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 5பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுவட்டார பகுதிகளான சின்னபள்ளிகுப்பம், மேல்குப்பம், இலங்கை தமிழர் குடியிருப்புப் பகுதி, ஈச்சம்பட்டு, ஆகிய பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து செல்வதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இதற்காக தலைமையாசிரியர் பிரபுதாஸ் மலர் வேந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவர்கள் நலனுக்காக 6 லட்சம் மதிப்பிலான ஒரு பேருந்தை வாங்கி அந்த பேருந்தில் தினந்தோறும் காலை,மாலை இருவேளைகளிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும் பின்னர் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதுமாக பயன்படுத்தி வருகின்றனர் இதற்காக கிராம மக்கள் 2 லட்சம் ரூபாயும் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் என அனைவரும் பணம் உதவி செய்து தற்போது மாணவர்களுக்கு பேருந்தை ஏற்பாடு செய்துள்ளனர் இப்பேருந்தை மாவட்ட கல்வி அலுவலர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதன் பின்னர்  ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு கை அலம்பும் (wash basin) ரோட்டரி சங்க தலைவர் ஆசிரியர் குணசேகரன்  மாவட்ட கல்வி அலுவலர் லதாவிடம் மாணவர்களுக்காக வழங்கினார் இதில் கிராம மக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும்  பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர்கள்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வசதி செய்து தரப்படும் என்று தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர் இதில் வட்டார கல்வி அலுவலர்கள், ரோட்டரி சங்கத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post Top Ad