5 வயது பள்ளி மாணவர் : கண்களை கட்டியபடி 3 சாதனைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 25, 2019

5 வயது பள்ளி மாணவர் : கண்களை கட்டியபடி 3 சாதனைகள்




புதுச்சேரியில், 5 வயது சிறுவன், கண்களை கட்டியபடி, மூன்று சாதனைகள் செய்து, அசத்தினார்.புதுச்சேரி அடுத்த வில்லியனுாரைச் சேர்ந்தவர் பிரபு, 38; தொழிலதிபர். இவரது மனைவி சங்கரி, 33; இவர்களது மகன் சாய்பிரணவ், 5; மூலக்குளம் பெத்திசெமினார், சி.பி.எஸ்.இ., பள்ளியில், முதல் வகுப்பு படித்து வருகிறார்.

37 வினாடிகள்இச்சிறுவன் நேற்று முன்தினம், தன் கண்களை கட்டி, புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைதல், மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுதல், இந்திய ரூபாய் நோட்டுகளை நிறம், மதிப்பு, எண்களை படித்தல் என, மூன்று உலக சாதனைகளை செய்தார்.புள்ளிகளை இணைத்து, 16 வகையான ஓவியங்களை, 11 நிமிடங்கள், 57 வினாடிகளில் தீட்டினார், 20 வகையான இந்திய கரன்சிகளை, 7 நிமிடங்கள், 37 வினாடி களில் அடையாளம் கண்டு தெரிவித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.மேலும், 'சப்வே' வீடியோ கேமில் முதல் சுற்றை, 2 நிமிடங்கள், 59 வினாடிகளிலும், 'டாம் கோல்டன் ரன்வே' வீடியோ கேமை, 4 நிமிடங்கள், 15 வினாடிகளில் நிறைவு செய்தார். இவை அனைத்தையும் கண்ணை கட்டி, சர்வ சாதாரணமாக நிறைவு செய்தார்.புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், 'அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு' நிறுவனம், இந்த மூன்று சாதனைகளையும் பதிவு செய்து, சான்றிதழ் வழங்கியது.தாய் சங்கரி கூறியதாவது:சாய் பிரணவ், ரொம்ப துருதுருவென இருப்பான்.


வீடியோ கேம்னா கொள்ளை பிரியம். இவனை, 'கன்ட்ரோல்' பண்ணி ஓர் இடத்தில் உட்கார வைக்கவும், கவனத்தை ஒரே விஷயத்தில் குவிக்க வைக்கவும் என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.ஆரம்பத்தில், 'ஸ்மார்ட் போன்' கொடுத்து வந்தோம். ஆனால், ஒரே நிபந்தனை, கண்ணை கட்டிக்கிட்டு தான் வீடியோ கேம் விளையாடணும்னு சொன்னோம். ஆனால் என்ன ஆச்சரியம். அவன் கண்ணை கட்டிக்கிட்டு வீடியோ கேமை ஆடினான்.திறமைஅப்போது தான், இவனுக்குள்ள திறமை வெளியே தெரிந்தது.


இதன்படி, படிப்படியாக கரன்சி, நிறம் கண்டறிதல், எண்களை கூறுதல், மதிப்புகளை கூறுதல், என, பல திறமைகளை வெளிப்படுத்தினான். அவன், முத்தாக மூன்று சாதனைகளை படைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.இவ்வாறு, அவர் கூறினார்.'அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு' நிறுவனர் ராஜேந்திரன் கூறும்போது, ''இது, மாயாஜாலம் கிடையாது. அறிவியல் பூர்வமான செயல்முறை தான். போதுமான பயிற்சி இருந்தால், இதுபோல் கண்களை மூடி, சாதனை புரியலாம்,'' என்றார்.

Post Top Ad