தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை ) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 6, 2019

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை )





தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர் கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளி களை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே குளத்தூர் மற்றும் ஆவுடையார் கோவில் அருகே உள்ள சின்னப் பட்டமங்களம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூல கம் அமைக்க அரசு ஆணையிட் டுள்ளது. இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப் பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளில் அத்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நூலகத் துறை அலுவலர்கள் தரப்பினர்,  நாளிதழிடம் கூறியதாவது:

மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை

தமிழகத்தில் அதிகபட்சமாக நீல கிரி மாவட்டத்தில் 6 பள்ளிக் கட்டிடங்களில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல, வேலூர், சிவகங்கையில் தலா 4 பள்ளிகளிலும், விருதுநகர், திருவண்ணா மலை, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பள்ளி களிலும் நூலகம் தொடங்கப்பட உள்ளது.மேலும், விழுப்புரம், தூத்துக் குடி, புதுக்கோட்டை, கரூர், திண் டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங் களில் தலா 2 பள்ளிகளிலும், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டி னம், காஞ்சிபுரம் மற்றும் கோவை யில் தலா 1 பள்ளியிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

நூலகம் அமைக்க உள்ள ஊர்களில் வாடகைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கினால், அது பள்ளிக் கட்டிடத்துக்கு மாற்றப் படும். இல்லையெனில், முதல் கட்டமாக 500 புத்தகங்களைக் கொண்டு நூலகம் தொடங்கப்படும்.

இந்நூலகம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை செயல்படும். பிளஸ் 2-வுடன் சிஎல்ஐஎஸ் படித்தவர்கள், ரூ.315 தினக்கூலி அடிப்படையில் இங்கு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

பள்ளிக் கட்டிடங்களில் அமைக் கப்படும் நூலகத்தால் ஏற்படும் செலவுகள், நூலக ஆணைக் குழு நிதியில் இருந்து பார்த்துக் கொள்ளப்படும். 46 இடங்களிலும் புதிய நூலகங்களை ஆக.10-ம் தேதிக்குள் அமைத்து, அதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நூலகத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தனர்.


நூலகம் அமைக்க உள்ள ஊர்களில் வாடகைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கினால், அது பள்ளிக் கட்டிடத்துக்கு மாற்றப்படும்.

Post Top Ad