அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, August 17, 2019

அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில் 10, பிளஸ்1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், அதை அடிப்படையாக கொண்டு அனைத்து வகைப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும்.தேர்வு அட்டவைணயில் தெரிவிக்கப்பட்டுள்ள பாடத் தேர்வுகள் இரண்டரை மணி நேரத்தில் நடக்கும். வழக்கம் போல, தேர்வு தொடங்கும் போது கேள்வித்தாள் படிக்கவும், விடைத்தாளில் முகப்பு பக்கத்தில் விவரங்களை குறிக்கவும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

அதனால் தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடியும். பிளஸ் 1 ேதர்வு மதியம் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடியும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழித்தாள் 1
செப்.13 மொழித்தாள்-2
செப்.16 ஆங்கிலம்-தாள் -1
செப்.17 ஆங்கிலம் தாள்-2
செப்.18 விருப்ப மொழிப்பாடம்
செப்.19 கணக்கு
செப். 21 அறிவியல்
செப். 23 சமூக அறிவியல்

பிளஸ் 1 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிக
வியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல், நர்சிங் (ெபாது) மற்றும் (தொழில்)
செப்.17 தொடர்பு ஆங்கிலம், நெறியியல் மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், பயன்பாட்டு கணினி, உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
செப்.19 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
செப்.21 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்,
செப்.23 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் (பொது)(தொழில்)
செப்.17 தொடர்-்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
செப்.19 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில் நுட்பம்
செப்.20 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம், மற்றும்தொழிற்கல்வி பாடங்கள்.
செப்.23 வேதியியல், கணக்குப்
பதிவியல், புவியியல்

Post Top Ad