Flash News - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் ஆய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, July 22, 2019

Flash News - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் ஆய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு





அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.








தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் கற்றுத்தரும் திறனை அறியவும், மாணவர்களின் கற்கும் திறனை அறியவும் ஆய்வுக்குழுக்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சவுபாக்கியவதி : புதுக்கோட்டையை சேர்ந்த சவுபாக்கியவதி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கற்றல், கற்பித்தல் திறன் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலவலர்கள் தலைமையில் பல்வேறு சிறப்பு குழுக்களை அமைத்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்களின் கற்றல் திறனை அறிந்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : இந்த ஆய்வுகளை அரசும், பள்ளிக்கல்வித்துறையும் அடிக்கடி மேற்கொள்ள ண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அந்த உத்தரவில் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணிதத்திறன் மேம்பாடு : அதேபோல, நிபுணர் குழுக்களின் ஆலோசனைகளில் பேரில், கல்விக்கொள்கையின் அடிப்படையில், தொடக்க கல்வியில் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் மேம்பட மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டு மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை முடித்து வைத்தது

Post Top Ad