கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, July 14, 2019

கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு




2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவால் துவங்கப்பட்டது அகரம் கல்வி அறக்கட்டளை தொண்டு நிறுவனம். இதன் மூலம் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படிப்புகளை முடித்து வேலை செய்து வருகின்றனர். மேலும் தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இன்று அகரம் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் நடிகர் சூர்யா. தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கல்வி முறைகளைப் பற்றியும் அரசு பள்ளிகளில் நிலைகளைப் பற்றியும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.ஒட்டு மொத்த இந்தியாவில் கல்வி தரத்தைமாற்றுவதன் மூலம் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றலாம். ஆனால் இதைக் குறித்து யாரும் பேசுவதில்லை. 


முக்கியமாக மாணவர்களும் ஆசிரியர்களும் இதைப்பற்றி ஏன் பேசவில்லை என சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி என்ற முறையில் பழங்குடி கிராமங்களில் உள்ள 1848 பள்ளிகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அந்தப் பள்ளிகளை மூடி விட்டால் அந்த பகுதியில் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு எங்கே போவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான கல்வி முறையை பின்பற்றாமல் அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்பது முறையா? அதைப் போன்ற தகுதித் தேர்வுகள் குறிப்பாக நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது முறையா? சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில் அந்தப் பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் எவ்வாறு நீட் தேர்வு எழுதுவார்கள்? இந்த நிலை மாற வேண்டும்; இது குறித்து அனைவரும் பேச வேண்டும் எனவும் நடிகர் சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

Post Top Ad