வாட்ஸ்ஆப்பில் வதந்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக புதிய வசதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 20, 2019

வாட்ஸ்ஆப்பில் வதந்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக புதிய வசதி




வாட்ஸ்ஆப்பில் வதந்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக புதிய வசதி ஒன்றை கொண்டு வர வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலியில் வதந்திகளும், தவறான தகவல்களும் அதிக அளவில் பரவி வருவது மத்திய அரசுக்கு பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. மாட்டு இறைச்சி படுகொலைகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவும் வாட்ஸ்ஆப் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக, வாட்ஸ்ஆப்பில் 'கைரேகை' பதிவு வசதி கொண்டு வர மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.இதன்படி ஒவ்வொரு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவவதற்கும் டிஜிட்டல் கைரேகை பதிவு அவசியம்.


தற்போது அனுப்பிய தகவலை, அனுப்பியவரே ஒரு மணி நேரத்திற்குள் அழித்து விடும் வசதி வாட்ஸ்ஆப்பில் உள்ளது. இதனால் குறிப்பிட்ட தகவலை முதலில் யார் அனுப்பியது என்பதை கண்டறிய இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய வசதி மூலம் குறிப்பிட்ட தகவலை முதலில் அனுப்பியது யார், அவரின் வாட்ஸ்ஆப் குழுவில் இருப்பவர்கள் யார், குறிப்பிட்ட தகவலை எத்தனை பேர் படித்துள்ளனர், அந்த தகவல் எத்தனை பேருக்கு பகிரப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தகவலை அரசு பெற முடியும்.இந்த புதிய வசதியால் வாட்ஸ்ஆப் சாட்டில் அனுப்பப்படும் அனைத்து தகவல்களையும் அரசால் பெறவோ, கண்காணிக்கவோ முடியாது. வதந்திகள் அல்லது தவறான தகவல்களை மட்டுமே கண்காணிக்க முடியும். ஒருவர் அனுப்பும் தகவல் விபரங்களை போலீஸ் அல்லது மற்ற சட்ட துறைகள் தவிர வேறு யாராலும் கண்காணிக்க முடியாது.வாட்ஸ்ஆப்பில் தற்போதுள்ள வசதியின்படி போலீசால் குறிப்பிட்ட தகவலை அனுப்பியவரின் புரோபைல் படம், மொபைல் எண், குரூப் உறுப்பினர்களின் பெயர்கள், தகவல் அனுப்பியவர் இருக்கும் இடம், அவர் அந்த தகவலை அனுப்பிய நேரம், ஐபி முகவரி உள்ளிட்டவைகளை மட்டுமே பெறவோ அல்லது கண்காணிக்கவோ முடியும்.

Post Top Ad