ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு வர முதல்வருக்கு மனு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 26, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு வர முதல்வருக்கு மனு

'விரைவில் நடக்க உள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில், திருத்தம் கொண்டு வரவேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.அதன் விபரம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படும், பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, சொந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில், மாறுதல் பெற்று செல்வது வழக்கம்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்ட கலந்தாய்வு நெறிமுறைகள், ஆசிரியர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை, 10ம் தேதி நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், 2019, ஜூன், 1ல், தற்போது பணிபுரியும் பள்ளியில் தொடர்ந்து, மூன்று ஆண்டு கள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.


அதன்படி, 2016 ஆகஸ்டில் நடந்த கலந்தாய்வில், பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கூட, பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விதியை தளர்த்த வேண்டும். ஒரு ஆசிரியர், ஒரு பள்ளியில், ஓராண்டு பணியாற்றினாலே, கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற வகையில், திருத்தம் கொண்டு வரவேண்டும். 2018, ஜூனில், பணி நிரவல் மூலம், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, கட்டாய பணி மாறுதலில் அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு, நடப்பு ஆண்டு கலந்தாய்வில், முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad