அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 20, 2019

அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்'



 ''அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியர், ஆங்கிலத்தில் பேச, அரசு பயிற்சி அளிக்க வேண்டும்,'' என, முன்னாள், எம்.எல்.ஏ., அப்பாவு தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், நேற்று, முன்னாள், எம்.எல்.ஏ., அப்பாவுவை அழைத்து பேசினார்.அதன்பின், அப்பாவு, நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், 37 ஆயிரத்து, 211 அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இது தவிர, 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும், தமிழ் வழிக் கல்வியை போதிக்கின்றன. இப்பள்ளிகளில், 85 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, இரண்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆங்கிலம் கற்று கொடுக்கின்றனர். எனினும், ஆங்கிலம் பேச முடியாத நிலையில், பிளஸ் 2 முடித்து, மாணவர்கள் வெளியில் வருகின்றனர்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச, பயிற்சி கொடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் சென்றேன். நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முதன்மை செயலர், என்னை அழைத்து பேசினார்.

தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்கள் மட்டும், ஆங்கிலம் தெரியாமல் வருகின்றனர். ஆங்கில வழி கல்வி கற்பிக்கும், 12 ஆயிரத்து, 419 பள்ளிகளில், 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்; அவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்.இதன் காரணமாக, தமிழ் வழி கல்வி பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு லட்சம் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். ஆங்கிலம் கற்று கொடுக்காததால், தமிழ் வழி கல்வி பள்ளிகளை, மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதிலிருந்து காப்பாற்ற, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இரண்டாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை, ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad