TET - சிறப்பு பயிற்சியாளர்கள் 'சிறப்பாக' இல்லை! - டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 22, 2019

TET - சிறப்பு பயிற்சியாளர்கள் 'சிறப்பாக' இல்லை! - டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.


டெட் தேர்வு நிபந்தனைகளில் சிக்கியுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, DIET மூலம் வழங்கப்படும் சிறப்பு பயிற்சியில் திறனற்ற பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறி குமுறுகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சியடையாத, ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு  மாவட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 1500 ஆசிரியர்கள் டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டிய கட்டாய சூழல்.இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கான டெட் பயிற்சி வகுப்புகள், அவசரகதியில் துவங்கப்பட்டுள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், நடத்தப்படும் பயிற்சிக்கு, கருத்தாளர்களே பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.டெட் தேர்வுக்குரிய பாடத்திட்ட புத்தகங்கள், தமிழ்நாடு பாடத்திட்ட புத்தகங்கள் மற்றும் உளவியல் என மொத்தம், 700 யூனிட்டுகள் உள்ளது.இவை 10 நாட்களில் முழுவதும் முடிக்க வாய்ப்பே இல்லை.அதற்கு தகுந்தவாறுஇந்த பாடத்திட்டங்களை கற்பிக்க, திறன்மிக்க பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை.

பெயரளவுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது.உளவியல் தவிர,மொழிப்பாடங்கள் மற்றும்  முதன்மை பாடங்கள் நடத்ததிறமையான பயிற்றுனர்களை நியமித்தால் மட்டுமே, பயிற்சி உதவிகரமாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், தங்களுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான பயிற்றுனர்களை நியமிக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை தமிழகம் முழுவதும் இதுபோன்ற சூழலில் தான் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவும் இந்தபயிற்சியை சிறுபான்மையினர் பள்ளி் ஆசிரியர்களுக்கு வழங்கியது போல (Refreshment course) புத்தாக்கப் பயிற்சியாக தமிழக அரசு அறிவித்து, திறன் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு இனி வரும் நாட்களை பயனுள்ள வகையில் மாற்றித் தர வேண்டும் என TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு  தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுகிறது.

Post Top Ad