ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்களை அரசு இ சேவை மூலம் எவ்வாறு எளிதாக பெறுவது? மற்றும் ஒவ்வொரு சேவைக்குமான கட்டணத் தொகை விவரங்கள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 13, 2019

ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்களை அரசு இ சேவை மூலம் எவ்வாறு எளிதாக பெறுவது? மற்றும் ஒவ்வொரு சேவைக்குமான கட்டணத் தொகை விவரங்கள்!



முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்

பள்ளி திறக்க இன்னும் 20 நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

புகைப்படம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ்(TC)
மதிப்பெண் பட்டியல்(10,12)
ஜாதி,வருமானம் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்
தொலைப்பேசி(otp வரும் அதனால்)
அனைத்தும் அசல் மற்றும் நகல்

ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்
புகைப்படம்
தொலைப்பேசி otp வரும் அதனால்
அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
வருமான சான்று(payslip) + பான்கார்டு
தொலைப்பேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை

இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
தொலைபேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல்

மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள்  உங்களுடைய அலைச்சல் குறைக்கலாம்.

Post Top Ad