54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Post Top Ad

Wednesday, May 15, 2019

54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு!


தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என்று கூறியுள்ளது. பாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள், எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது,  அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகள் நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கருத முடியாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு  வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Recommend For You

Post Top Ad