ஒரு வருஷத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா_அன்லிமிட்டெட் கால் அதிரடியில் இறங்கிய வோடாபோன் - Asiriyar.Net

Post Top Ad

Monday, May 20, 2019

ஒரு வருஷத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா_அன்லிமிட்டெட் கால் அதிரடியில் இறங்கிய வோடாபோன்வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும். அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி, நொய்டா, குர்கிராம், பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், மும்பை மற்றும் சண்டிகர் இவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த வகை புதிய சலுகைகளை பெற வேண்டுமானால் பயனர்கள் ஏற்கனவே தங்களிடம் உள்ள பிரீபெயிட் சேவையை வேண்டும்.பின்னர் வோடாபோன் சலுகைகள் அடங்கி உள்ள வலைதளத்திற்கு சென்று அதில் புதிதாக உள்ள கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவர்கள் இந்த கிரெடிட் கார்டை பெற்ற உடன் அதில் குறைந்த பட்சமாக ரூ.4000 செலுத்தினால் ஒருவருடத்திற்கு இந்த வகை சேவைகளை தினமும் பயன்படுத்தலாம். மேலும் இதெல்லாம் கார்டு வாங்கிய 30 நாள்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும்.இதனை ஒரே சமயத்திலும் பயன்படுத்தலாம் அல்லது சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்தால் தினமும் 1.5 GB டேட்டாவையும் ,அன்லிமிட்டாடு வாய்ஸ் கால்களையும் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
ஒரு வருஷத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா_அன்லிமிட்டெட் கால் அதிரடியில் இறங்கிய வோடாபோன்

Recommend For You

Post Top Ad