TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 14, 2019

TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா?



#பட்டதாரி_இளங்கலை_ஆசிரியர் படிப்பிற்கு SC மாணவர்கள் 40% மும்
MBC 43 %சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் கல்லூரியில் #அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது .

ஆனால்TET தேர்வு எழுத அனைத்து_பிரிவினருக்கும் 45% என ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்து இருக்கிறது!

இது முரணாக இருக்கிறது கல்வி பயில அனுமதிக்க ஒரு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்புக்கு செல்ல ஒரு மதிப்பெண்ணும் நிர்ணயித்திருப்பது

40%முதல் 44% வரை மதிப்பெண் பெற்று இளங்கலை ஆசிரியர் படிப்பு பயின்ற மாணவர்களின் எதிர்காலத்தை பறித்துள்ளது!

இந்த விதிமுறைக்கு தேசிய_கல்வி_வாரியம் கொண்டுவந்த விதிமுறை தான் காரணம் என கூறுகிறது #தமிழ்நாடு_ஆசிரியர்தேர்வு வாரியம்

இது இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் சமூகநீதி கொள்கைக்கும் எதிரான முடிவு ஆகும்


இந்த நேரம் தேர்தல்நேரம் என்பதால் அனைவரின் கவனமும் தேர்தல் மீது தான் இருக்கிறது

இந்த அறிவிப்பு மூலம் எண்ணற்ற மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் எதிர்காலம் வீணடிக்கப்படும்
சூழலை மத்திய_அரசும்_மாநில_அரசும் இணைந்தை உருவாக்கியுள்ளது

சமூக_செயற்பட்டாளர்களும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி காவலர்களும்
இந்த விசயத்தை உற்று கவனித்து தேர்வு எழுத முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் நலனை மீட்க கரம் கோர்க்க வேண்டும்!


நாம் அனைவரும் இந்த விசயத்தை மெளனமாக கடந்து செல்லாமல்


வருமுன் காப்போம்
மேலும் வழக்கில் இணைந்து வெற்றிபெற தொடர்புக்கு
திரு.அன்னக்கொடி மதுரை
செல்: 99433 10588

Post Top Ad