JACTTO-GEO போராட்டத்தில் பங்கேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ,பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற்று 17(b) வாங்கிய ஆசிரியர் தோழர்களின் கவனத்திற்கு... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 21, 2019

JACTTO-GEO போராட்டத்தில் பங்கேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ,பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற்று 17(b) வாங்கிய ஆசிரியர் தோழர்களின் கவனத்திற்கு...


JACTTO-GEO போராட்டத்தில் பங்கேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ,பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற்று 17(b) வாங்கிய ஆசிரியர் தோழர்களின் கவனத்திற்கு...

தொடக்கக்கல்வி துறையில்  குறிப்பாணை பெற்றவர்கள் 30 நாட்கள் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்க கோரியிருந்தோம்.ஆனால் நிறைய பேர் விண்ணப்பிக்கவில்லை .ஆகையால் இத்துடன் இணைத்துள்ள இந்த படிவத்தை நான்கு நகல்கள்(பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 5நகல்கள்)  எடுத்து 21 நாட்கள் முடிவதற்குள்(ஆணையை கையொப்பமிட்டு வாங்கிய நாளிலிருந்து 20 நாட்கள் எந்த தேதியில் முடிவடையிகிறதோ அந்த தேதி குறிப்பிடவும்) வட்டாரக்கல்வி அலுவலகத்தில் உரிய வழிமுறையில் (தலைமையாசிரியரின் பணிந்தனுப்புதல் கையொப்பத்துடன்) ஒரு நகல் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் முகவரி எழுதி வட்டாரக்கல்வி அலுவலகத்தில் இரண்டு நகல்களில் சமர்ப்பிக்க வேண்டும்.


மீதமுள்ள 3 நகல்களை  இரண்டு நகல்கள் நீங்கள் உறுப்பினராக உள்ள அமைப்பிடம் வழங்க வேண்டும்(மாநிலத்திற்கு ஒன்று).மீதமுள்ள ஒரு நகலை உங்கள் கைவசம் வைக்க வேண்டும்.17(b) பெற்ற நாள் மற்றும் கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்த நாள் சரியாக பராமரிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் தனி பொறுப்பாகும்.இதனை இரண்டு நாட்களுக்குள் முடிக்க வேண்டும்(திங்கள், செவ்வாய்) துரிதமாக செயல்படுங்கள்


JACTTO GEO - 17B Interim Reply Extension


Post Top Ad