EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டியவை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 6, 2019

EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டியவை






கல்வியியல் மேலாண்மைத் தகவல் செய்தி!!


👉EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டியவை.

1. மாணவ/ மாணவியரின் பெயர் தமிழ் / ஆங்கிலத்தில் சரியாக இருத்தல் வேண்டும். 
Ex- *(ராஜேஷ் குமார் சி /  RAJESH KUMAR C)*

2.தந்தை தாயின் பெயர் *( SAMY / VIJAYA)* 
ஆங்கிலத்தில். 

3.பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில். (பள்ளியின் பெயர் மட்டும் சுருக்கப்பட்ட முறையில்) *PUPS /PUMS*

4. பிறந்த தேதி. 

5.ரத்த பிரிவு.

 6.தொடர்பு எண்.Contact No

7.வீட்டு முழு முகவரி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

8. மாணவ மாணவிகள் புகைப்படம் (Recent Photo)
*கவனம் தேவை அடையாள அட்டை (Smart Card) வழங்கப்படுவதால் இதில் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பாகும்.

👉பள்ளியின் சுயவிவரம் அனைத்து பகுதிகளும் சரிபார்க்கப்பட வேண்டும்.

👉 ஆசிரியர்கள் சுய விவரம் அனைத்தும் சரிபார்க்கப்பட வேண்டும்.

👉 புதிய மாணவர்களின் விவரத்தை EMISயில் 
பதிவு செய்யும்போது சேர்க்கை எண் மற்றும் தேதி சரியாக இருத்தல் வேண்டும்.

👉EMISயில் வகுப்பு வாரியாக பயிற்று மொழி மற்றும் பிரிவுகள் பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

👉 இப்பணி வருகின்ற 8-4-2019 திங்கட்கிழமைக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும்.

👉 Attendance Appயில் மாணவர்களின் வருகை விவரத்தை பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


Post Top Ad